வைரலாகும் "என் ஓட்டு உனக்கில்லை"  பாடலால் புகழ்பெற்றுள்ள சோஃபியா தேன்மொழி அஸ்ரப் பிபிசிக்கு அளித்த பேட்டி

வைரலாகும் "என் ஓட்டு உனக்கில்லை" பாடலால் புகழ்பெற்றுள்ள சோஃபியா தேன்மொழி அஸ்ரப் பிபிசிக்கு அளித்த பேட்டி

BBC Tamil

07/02/2017 3:31AM

Episode Synopsis "வைரலாகும் "என் ஓட்டு உனக்கில்லை" பாடலால் புகழ்பெற்றுள்ள சோஃபியா தேன்மொழி அஸ்ரப் பிபிசிக்கு அளித்த பேட்டி"

ஞாயிற்றுக்கிழமையன்று ஆளும் கட்சியான அ.தி.மு.கவின் சட்டமன்ற கட்சித் தலைவராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியும் கட்சியின் பொதுச் செயலாளருமான சசிகலா தேர்வுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஜெயலலிதாவின் இல்லம் இருந்த போயஸ் கார்டன் சாலைக்கு வந்த ஒரு ராப் இசைக் குழுவினர், இந்தத் தேர்வைக் கடுமையாக விமர்சித்து பாடல்களைப் பாடினர். அந்தப் பாடல் காட்சி ஃபேஸ்புக்கில் நேரலையாகவும் ஒளிபரப்பானது. சுரேஷ் விகாஸ் என்பவர் இசையமைக்க சோஃபியா தேன்மொழி அஸ்ரப் என்பவர் பாடிய அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் மிகத் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. "என் ஓட்டு உனக்கில்லை" என்ற அந்தப் பாடலைத் தாங்கள் பாடிச் சென்றபோது, தன்னுடைய உடை குறித்து காவல்துறையினர் கேள்வி எழுப்பியதாகவும் ஆனால், தங்கள் பாடலுக்கு பொதுமக்களிடம் பெரும் ஆதரவு இருந்ததாகவும் பிபிசியிடம் கூறினார் சோஃபியா.

Listen "வைரலாகும் "என் ஓட்டு உனக்கில்லை" பாடலால் புகழ்பெற்றுள்ள சோஃபியா தேன்மொழி அஸ்ரப் பிபிசிக்கு அளித்த பேட்டி"

More episodes of the podcast BBC Tamil