அதிமுக உறுப்பினர் போல் பேசுகிறார் ராம மோகன ராவ் : குருமூர்த்தி பேட்டி

அதிமுக உறுப்பினர் போல் பேசுகிறார் ராம மோகன ராவ் : குருமூர்த்தி பேட்டி

BBC Tamil

27/12/2016 4:35PM

Episode Synopsis "அதிமுக உறுப்பினர் போல் பேசுகிறார் ராம மோகன ராவ் : குருமூர்த்தி பேட்டி "

தமிழகத்தின் தலைமை செயலராக இருந்த ராம மோகன ராவின் வீடு மற்றும் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவரின் பேச்சு ஒரு அதிமுக உறுப்பினரின் பேச்சு போன்றது என துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். ராமமோகன ராவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் அவர் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனப் பேசியது குறித்து பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்த குருமூர்த்தி, ''ஓர் அதிமுக உறுப்பினர் பேசுவது போன்றே அவரது பேச்சு இருந்தது. அவரது உயிருக்கு யாரால் ஆபத்து என்பதைக் குறிப்பிடவில்லை. அம்மாவால் வளர்க்கப்பட்டவன் என்று அவர் குறிப்பிடுவது ஓர் அரசாங்க அதிகாரிக்கு எந்தவிதத்திலும் பொருந்தாத ஒரு செய்கை,,'' என்றார். ''ராமமோகன ராவ் வீட்டில் தடயம் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். அவரது மகனின் வீட்டில் தடயம் இல்லை என்று சொல்லவில்லை. இது ஓர் அரசியல் தலைவர் சொல்வது போல உள்ளது. அவரது அலுவலகத்தில் எந்தக் கோப்புகளும் சிக்கவில்லை என்று அவர் சொல்லமுடியுமா?'' என்று கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் போது மத்திய பாதுகாப்பு படை பயன்படுத்தப்பட்டது குறித்துக் கேட்டபோது , ''ராமமோகன ராவ் தலைமை செயலர். தமிழக காவல் துறையினர் அவரின் கட்டளையை ஏற்க வேண்டும். அதனால் மத்திய படையை பயன்படுத்தியதில் எந்தத் தவறும் இல்லை,'' என்றார். பாரதீய ஜனதா ஆட்சியில் இல்லாத, பலம் பொருந்திய மாநில கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதிக அளவில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறதா என்று கேட்டபோது,''தமிழகத்தில்தான் 32 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் கண்டுபிக்கப்பட்டன. பாரதீய ஜனதா ஆளும் குஜராத், மகாராஷ்டிராவில் கூட தான் சோதனை நடத்தப்பட்டது, பணம் பிடிபட்டது, தினமும் செய்தி வருகிறது. ஆனால் பாரதீய ஜனதாவுக்கு தன் மீது பழிவாராமல் காத்துக் கொள்ளவது எப்படி என்று தெரியும்,'' என்று குறிப்பிட்டார்.

Listen "அதிமுக உறுப்பினர் போல் பேசுகிறார் ராம மோகன ராவ் : குருமூர்த்தி பேட்டி "

More episodes of the podcast BBC Tamil