ஜல்லிக்கட்டில் ஜாதிப்  பிரச்சனை இருக்கிறதா?

ஜல்லிக்கட்டில் ஜாதிப் பிரச்சனை இருக்கிறதா?

BBC Tamil

19/01/2017 5:25PM

Episode Synopsis "ஜல்லிக்கட்டில் ஜாதிப் பிரச்சனை இருக்கிறதா?"

ஜல்லிக்கட்டு தடை தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு தமிழ்ப் பண்பாட்டின் ஒரு சின்னமாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால் இது அனைத்து தமிழ் மக்களின் பண்பாட்டு சின்னம் என்று கூறமுடியாது, இது நிலப்பிரபுத்துவ அமைப்பின் அம்சங்கள் இருக்கின்றன. சாதிய ஒடுக்குமுறையின் அம்சங்களும் இருக்கின்றன என்று சில தலித் அமைப்பினர் கூறுகின்றனர். குறிப்பாக தலித்துகள், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் சில கிராமங்களில், மாட்டை அடக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இது போன்ற கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த கருத்து குறித்து எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள் பிபிசி தமிழுக்குத் தெரிவித்த கருத்துகள்

Listen "ஜல்லிக்கட்டில் ஜாதிப் பிரச்சனை இருக்கிறதா?"

More episodes of the podcast BBC Tamil