Listen "கலைஞர் பேனா சின்னம் - கடுமையாக எதிர்க்கும் சீமான்!"
Episode Synopsis
*இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்தியா மிகப்பெரிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. திருவள்ளுவர், ஆதிசங்கரர், குருநானக் ஆகியோரின் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி ஜனாதிபதி உரையை புறக்கணித்திருக்கின்றன.* இந்தியா: மோடி கேள்விகள் என்ற பிபிசியின் ஆவணப்படத்தை மத்திய அரசு இந்தியாவில் தடை செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் உள்ளிடோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் வரும் 6-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், பிபிசி ஆவணப்படத்தை இந்தியாவில் தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக சட்ட மந்திரி ரிஜிஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நீதி கிடைக்க தேதிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் காத்துக்கிடக்கும் சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் பொன்னான நேரத்தை அவர்கள் (பிபிசி ஆவணப்படம் மீதான தடையை எதிர்த்த வழக்கு) இவ்வாறு தான் வீணக்கிக்கின்றனர்.* 36 கோடி ரூபாயில் கலைஞர் பேனா நினைவுச்சின்னம் - கருத்து கேட்புகூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த சீமான்* சனாதன தர்மமே இந்தியாவின் தேசிய மதம். உ.பியில் மதம் மாற்றினால் 10 ஆண்டுகள் சிறை - யோகி* யார் இந்த ஹுண்டன்பர்க்?-Solratha Sollitom
ZARZA We are Zarza, the prestigious firm behind major projects in information technology.