தீவிரமாகும் காவிரி பிரச்னை - என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்? | Solratha Sollitom-13/09/2023

13/09/2023 18 min
தீவிரமாகும் காவிரி பிரச்னை - என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்? | Solratha Sollitom-13/09/2023

Listen "தீவிரமாகும் காவிரி பிரச்னை - என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்? | Solratha Sollitom-13/09/2023"

Episode Synopsis

* புதிய நாடாளுமன்றத்தின் ஊழியர்களுக்கு, புதிய சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. ஆண் ஊழியர்களுக்கு இளஞ்சிவப்பு நிற சட்டையும், காக்கி நிற பேன்ட்டும் சீருடையாக வழங்கப்பட்டிருக்கிறது. சட்டை முழுவதும் தாமரை படங்கள் இடம்பெற்றுள்ளன.* ஹரியானா கலவரம், கொலை வழக்குகளில் தொடர்புடைய பசு பாதுகாவலர் மோனு மானேஸர் நேற்று கைது செய்யப்பட்டார்.* சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கூறவில்லை. இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பலன்? விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.* "எந்த ஒரு பிரச்சினையையும் உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் பாஜகவினர் வல்லவர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். பாஜகவின் ஊழல், மதவாத, எதேச்சாதிகார முகத்தை அம்பலப்படுத்தி, நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற உன்னதமான இலக்கில் வெல்ல அர்ப்பணிப்போடு செயல்படுவோம். எந்த கவனச் சிதறலுக்கும் இடமளித்துவிடக் கூடாது" என்று திமுகவினருக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.* பார்வையாளர்கள் எவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தாலும் அந்த தொகை திருப்பியளிக்கப்படும் என்று ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் சிஇஓ ஹேமந்த் ராஜா தெரிவித்துள்ளார்.* காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூடி ஆலோசித்தனர். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ."காவிரி நீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் கடைசி முடிவு. இந்த வழக்கில் வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்பதை பார்த்துவிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டலாம். அதற்கு முன்பாகவே அந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய தேவை இல்லை" என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.-Solratha Sollitom

More episodes of the podcast Solratha sollitom| Hello Vikatan