Listen "பொங்கி எழுந்த ராகுல்...புகார் சொன்ன பா.ஜ.க! | Solratha Sollitom-09/08/2023"
Episode Synopsis
* கல்வெட்டு ஆய்வாளர் செ.ராசு காலமானார்...* நான் மணிப்பூருக்கு நேரில் சென்றேன், ஆனால் பிரதமர் இதுவரை செல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை; பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார். பாரத மாதாவைக் கொன்றுவிட்டீர்கள் - ராகுல்* நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாததின்போது மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசும்போது கூறியதாவது: "நான் ஒன்றை ஆட்சேபிக்கிறேன். எனக்கு முன் பேசியவர் வெளியேறும் முன் அநாகரீகமாக நடந்து கொண்டார். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து உள்ளபோது நாடாளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுப்பது பெண் வெறுப்பு கொண்ட ஆண் மட்டுமே. இதுபோன்ற கண்ணியமற்ற நடத்தை இதற்கு முன் இருந்ததில்லை. ஆனால் இப்போது நாடாளுமன்றத்தில் பார்த்தேன்..."* கரூர் ராம்நகரில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை * நாடாளுமன்றத்தில் டெல்லி சேவைகள் மசோதா 2023-க்கு எதிராக திமுக வாக்களித்ததற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். * மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல மல்யுத்த வீராங்கனை ராணி ராணா கணவர், மாமியார் மீது புகார்* போலி உருவங்களை உருவாக்கி 'வீடியோ கால்' அழைத்து மோசடி...* கைது செய்யப்படுவீர்கள் என்று என்னை அமைச்சர் ஸ்மிருதி ராணி அச்சுறுத்துவதாக திமுக உறுப்பினர் ஆ.ராசா குற்றச்சாட்டியுள்ளார்
ZARZA We are Zarza, the prestigious firm behind major projects in information technology.