Listen "எடப்பாடிக்கு எதிராக மீண்டும் எகிறும் பன்னீர்செல்வம்! | 03/03/2023"
Episode Synopsis
"ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் பெண்கள் ஆண்களுக்கு இணையாகக் கல்வி கற்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் பெண்கள் கல்வி கற்காமல் தடுக்கப்பட்டு வீட்டுவேலைக்கு அனுப்பப்பட்டனர்" -கவர்னர் ரவி* அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துசென்றுள்ள நம்பிக்கை துரோகி. அதிமுக 67 ஆயிரம் வாக்குகளில் தோல்வியடைய துரோகியும் அவரது சர்வாதிகார கூட்டம் தான் காரணம். - ஓ.பன்னீர்செல்வம்* கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஈபிஎஸ் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களிடம் விளக்கம் கோராமல் தீர்மானத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் ஈபிஎஸ் தரப்பு பதிலளிக்க வரும் 17 ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்து வழக்கை 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.* தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தெலங்கானா அரசு, ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. * ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான 19 வது மாநாட்டின் 73 வது கூட்டம் நடைபெற்றது. இதில் கைலாசா நாட்டின் அமெரிக்காவின் பிரதிநிதியாக மா.விஜயபிரியா நித்யானந்தா கலந்து கொண்டார். * பா.ம.க, மம்தா பானர்ஜி பற்றி திருமாவளவன் : * தமிழகத்தில் 120 பேச்சாளர்களை தயார் செய்கிறது பா.ஜ.,...* அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட 2 அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்தார் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்* ஹத்ராஸ் பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகள் விடுதலைCredits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed
ZARZA We are Zarza, the prestigious firm behind major projects in information technology.