சமூக முன்னேற்றத்திற்கு பெண் கல்வி அவசியமானது | டோக் பெருமாட்டி கல்லூரி பட்டமளிப்பு விழா |

17/02/2023 22 min

Listen "சமூக முன்னேற்றத்திற்கு பெண் கல்வி அவசியமானது | டோக் பெருமாட்டி கல்லூரி பட்டமளிப்பு விழா |"

Episode Synopsis

#PalanivelThiagaRajan #PTRMadurai #madurai
வாழ்க்கை என்ற பயணத்தில் நம்மை அடையாளங்கண்டு செயல்பட்டால் வெற்றியடையலாம் :டோக் பெருமாட்டி கல்லூாி பட்டமளிப்பு விழாவில் நிதியமைச்சர் பேச்சு
மதுரை டோக் பெருமாட்டி கல்லூாியில் 2018 - 2021 கல்வியாண்டு மாணவியருக்கான 56 வது பட்டமளிப்பு விழாபொன்விழா அரங்கில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாகச் சிற்றாலயப் பொறுப்பாளா் முனைவா் ஜெஸி ரஞ்சித ஜெபசெல்வி இறைவேண்டல் அமைந்தது. பட்டமளிப்பு விழாவிற்கான தொடக்கத்தினைக் கல்லூாி முதல்வா் முனைவா் கிறிஸ்டியானா சிங் தொடங்கி வைத்தாா். கல்லூாியின் துணைமுதல்வா் முனைவா் பியூலா ஜெயஸ்ரீ சிறப்பு விருந்தினரை வரவேற்றாா். 2022 - 2023 கல்வியாண்டிற்கான அறிக்கையை கல்லூாி முதல்வா் காணொலிக் காட்சியாக வழங்கினாா். பட்டமளிப்பு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் டாக்டர். பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன், வருகை புாிந்து சிறப்புரையாற்றினாா். அவா் தமது உரையில், “சமூகம் கல்விப்பணியில் சிறக்கப் பெண்கல்வி முக்கியமானது. மாணவர்களாகிய தாங்கள் சிறந்த கல்வி பெறுவதற்கும் போட்டித்தேர்வுகளில் வெற்றியடைவதற்கும் சமூகத்தில் சிறந்த தலைமைத்துவம் உடையவர்களாகத் திகழ்வதற்கும் இக்கல்வி நிறுவனம் உறுதுணை புரிவதாகக் குறிப்பிட்டாா். சமுதாயத்தில் ஏற்றம் பெற கல்வி ஒன்றே சிறந்தது என்பதைப் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கினார். வாழ்க்கை என்ற பயணத்தில் நம்மை அடையாளங்கண்டு செயல்பட்டால் வெற்றியடையலாம் என்ற அறிவுரையை முன்வைத்தார்.
தொடா்ந்து 1257 மாணவியருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழாவிற்கான உறுதிமொழியைக் கல்லூாி முதல்வா் கூற மாணவியா் ஏற்றனா். கல்வியில் சிறந்த மாணவியருக்குப் பாிசுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூாி குறித்த நினைவுகளைப் பேரவை முன்னாள் மாணவி நிக்கிதா பகிா்ந்து கொண்டாா்.
VIdeo @ youtu.be/pDQupzkiATI
Date : 28-01-2023
www.theptrfamily.com
www.youtube.com/c/PTRmadurai
www.twitter.com/ptrmadurai
www.facebook.com/meendumptr/

More episodes of the podcast Official channel of Dr. PTR Palanivel Thiagarajan