சாப்பாட்டில் குற்றம் சொல்ல வேண்டாம் – Do not find fault in Food – Thoughts on Taittiriya Upanishad

Sage of Kanchi

01/02/2025 6:00AM

Episode Synopsis "சாப்பாட்டில் குற்றம் சொல்ல வேண்டாம் – Do not find fault in Food – Thoughts on Taittiriya Upanishad"

Author: CHAKARAVARTHI RAJAGOPALACHARIYAR (RAJAJI) अन्नं न निन्द्यात् । तद्व्रतम् । “உண்ணும் உணவைப் பழித்தலாகாது; இது விரதமாகும்” என்று தைத்திரீய உபநிஷத்தில் பிருகுவுக்கு அவர் தகப்பனார் உபதேசிக்கிறார். தற்காலத்து வைத்திய சாஸ்திர புலவர்களும் இதையே சொல்வார்கள். ஆகாரம் உட்கொள்ளும் சமயத்தில் அதை பழித்தலோ, குறை கூறலோ, சந்தேகத்தலோ ஆரோக்கிய முறையாகாது. சாப்பிடும் போது, இது நல்லது, இது ஜீரணமாகிவிடும், இது எனக்கு ஆரோக்கியம் தரும், பலம் தரும், உள்ளத்தையும் சுத்தமாக்கும் என்று எண்ணி உணவை உட்கொள்ள வேண்டும் என்பது ஆரோக்கிய சாஸ்திர நியதி. நாம் எண்ணும் எண்ணங்களுக்கு அதிக சக்தி உண்டு. புசிக்கும் போது நாம் கொள்ளும் நம்பிக்கையே உணவை நல்லதாகவும் தீயதாகவும் செய்யும். ஜீவன்கள் அனைத்தும் உணவில் இருந்து உண்டாகின்றன. ஜீவன்களின் உயிரை தாங்குவதும் உணவே ஆகும். இவ்வளவே அல்ல. ஜீவன்கள் அனைத்தும் முடிவில் உணவாகவே முடியும். ஒவ்வொரு தாவர வகையும் பிராணி ஜீவனும் வேறு தாவர …

Listen "சாப்பாட்டில் குற்றம் சொல்ல வேண்டாம் – Do not find fault in Food – Thoughts on Taittiriya Upanishad"

More episodes of the podcast Sage of Kanchi